பார்வை மற்றும் பணி

கைத்தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக தரத்தினை மேம்படுத்துவதற்காக 1994 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை ஸ்தாபிக்கப்பட்டது. இதன் மூலம் . மேல் மாகாணத்தின் பொருளாதாரத்திற்கு சிறப்பான பங்களிப்பினைப் பெற்றுக்கொடுப்பதும், மேல் மாகாணத்தினுள் கைத்தொழில் அபிவிருத்தி, மேம்பாடு மற்றும் விஸ்தரிப்பு என்பனவும் மேற்கொள்ளப்படுகின்றன.

மேல் மாகாணத்தின் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை அரச தனியார், மற்றும் சிவில் சமூக தாபன அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு அரச மற்றும் அரச சார்பற்ற பிரிவுகளின் பங்காளர்களுடன் பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில் உருவாக்கங்களுக்காக மிகச் சிறந்த திட்டங்களைத் தயாரித்தல், குழுவாக வேலைசெய்தல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார அபிவிருத்தி செய்றபாடுகளை அபிவிருத்தி செய்தல் போன்ற விடையங்களில் நேரடியாக பங்களிப்பினைச் செய்கின்றது.

மாகாணத்தின் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் உற்பத்திப் பொருளாதார பங்களிப்பு அபிவிருத்திக்காக கைத்தொழிலாளர்களின் இயலுமை மற்றும் அவர்களின் உற்பத்தித்திறனுக்காக பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இதன் மூலம் கைத்தொழிலாளர்களின் நிரந்தர அபிவிருத்தியினை ஊக்கப்படுத்துவது நோக்கமாகும்.

மேல் மாகாணத்தின் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் பல படிகளின் ஊடாக கைத்தொழில் துறையினை அபிவிருத்தி செய்வதற்கு உரிய பகுதியினருக்கு உபாய ரீதியிலான திட்டங்களுக்காக பங்களிப்பு வழங்கப்படுகின்றது. அது உள்நாட்டு உற்பத்திக் குழு மற்றும் ஏனைய பொருளாதார மற்றும் தாபனப் பகுதியினரை ஒன்று சேர்த்தல் அத்துடன் இணைப்பு நடவடிக்கை செய்தல் மற்றும் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேல் மாகாணத்திற்காக பொருளாதார உதவியாளர்கள் மற்றும் சந்தைகளை இனங்காணுதல் வரையிலாக பரந்து செல்கின்றது. .

எங்களது நோக்கம்

“ மாகாணத்தினுள் காணப்படும் மிகச் சிறிய, சிறிய ,மற்றும், நடுத்தர அளவான (MSM) கைத்தொழில்களுக்காக பிரதான சேவை வழங்குனராகுதல். “

எங்களது பணி

கைத்தொழில்களுக்குத் தேவையான அறிவினைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் மேல் மாகாணத்தினுள் கைத்தொழிலுக்கான நிரந்தர சூழல் ஒன்றினை உருவாக்குதல் தற்போது காணப்படும் மற்றும் ஆரம்பிக்கப்படும் கைத்தொழில்களுக்கு இடையே முன்னேற்றகரமான சிந்தனைகளை ஏற்படுத்துதல் அத்துடன் பங்களிப்பினை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக அவர்களை ஊக்கப்படுத்துதல்.