IDA COM

IDACOM கணினி அலகானது 15ஆம் திகதி பங்குனி மாதம் 2010ஆம் ஆண்டில் 1994 ஆம் ஆண்டு 02ஆம் இலக்க சரத்தின் அடிப்படையில் 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொழிற்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் (மேல் மாகாண) நிறுவப்பட்டுள்ளது. IDACOM ஆனது கணினி உபகரணங்கள்இ மென்பொருட்கள்இ வலையமைப்புக்கள்இ மற்றும் ஏனைய IT, AV தொடர்பான செயற்பாட்டு தொகுதிகளின் விநியோகம் மற்றும் உதவி சார்ந்த IT அடிப்படையிலான வர்த்தத்திற்காக வடிவமைக்கப்பட்ட தீர்வூகளை உள்ளடக்குகின்றது. இந்த செயற்பாடுகள் மற்றும் தீர்வூகள் வாடிக்கையாளர்களிற்கு அவர்களுடைய முகாமைத்துவம்இ IT,AV தொடர்பான செயற்பாடு மற்றும் உபகரணங்களின் தேவைகளை பூர்த்திசெய்யூம் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. IDA COM ஆனது புதிய செயற்திட்டங்களை திட்டமிடல் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளிற்கு பொருத்தமான சிறந்த தீர்வூகளை வடிவமைத்தல் மற்றும் அமுலாக்கல் சார்பாக உதவிசெய்கின்றது.

நிதி இழப்புக்களிற்கு காரணமாக அமையூம் முக்கியமான காரணிகளில் ஒன்றாக திட்டமிடல் குறைபாடு திகழ்கின்றது. இச்செயற்பாடு எந்தவொரு வர்த்தகத்திலும் இணைந்த செயற்பாடாக அமைவதுடன்இ சிறந்த முறையில் பராமரிக்கப்படாத சந்தர்ப்பங்களில் இவ்உபகரணங்களின் முகாமைத்துவம் அதிகளது செலவூ கொண்டதாக அமையூம் வாய்ப்புக்கள் உண்டு. இதுதொடர்பான எங்களுடைய பிரதான செயற்பாடாகஇ வாடிக்கையாளர்கள் அவர்களுடைய TCO இன் (உரிமை கொள்வதற்கான மொத்தச் செலவூ) முகாமை மற்றும் பராமரிப்பில் சிறந்த தீர்வை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தல் அமைவதுடன் இதன் கருத்தாகஇ இயந்திரத்தை கொள்முதல் செய்த திகதியிலிருந்தான மொத்தச் செலவினங்களை குறிக்கின்றது. இன்றும் சில நிறுவனங்கள் பொறுட்களை மிகவூம் குறைந்த சாத்தியமான விலையில் கொள்முதல் செயவதற்கு முன்னுரிமை அளித்தல் பதியப்பட்டுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மறைந்துள்ள செலவினங்கள் கருத்தில் கொள்ளப்படாதிருத்தல் சுட்டிக்காட்டப்படவேண்டிய அம்சமாகும்.

வரளாறு

கடந்த 6 ஆண்டு காலமாக IDA COM ஆனது பரந்த அளவான விநியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வலையமைப்பை கட்டியெளுப்பியூள்ளது. இவ்வாறான பங்குதாரர்களில் இன்டல் நிறுவனம்இ மைக்குறௌசொப்ட்இ HP, சம்சொங்இ டெல் போன்றவர்கள் அமைவதுடன் IDA COM ஆனது இவர்களின் உற்பத்திகளுடன் மேலதிக சேவைகளை வழங்குகின்றது. IDA COM ஆனது இவ்அனைத்து பங்குதாரர்களுடனும் ஒவ்வொரு வருடமும் வினைத்திறன் மேம்படுத்தல் பயிற்சி நடவடிக்கைகளை ஏற்படுத்தவேண்டிய கட்டாயத் தன்மையை கொண்டுள்ளது. இந்ந பயற்சி நடவடிக்கைகள் இப்பொருட்களின் உற்பத்தியாளர்களிடம் கட்டாய பயிற்சிக்கு உட்படவேண்டிய நடைமுறையை அனைத்து விநியோகத்தர்களிற்கும் நிர்ப்பந்தித்துள்ளது. இப்பயிற்சி நெறிகள் IDA COM இற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பம் மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கின்ற தொழில்நுட்பம் தொடர்பான அறிவை நிலைப்படுத்துகின்றன.

நோக்கு

IT மற்றும AV உபகரணங்களின் விநியோகம் மற்றும் சேவைகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்வதுடன்இ எமது வாடிக்கையாளர்களின் எதிர்கால வர்த்தகத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் தீர்வூகளை வழங்குதல். IDA COM ஆனது உங்கள் IT மற்றும் AV தீர்வூகளின் உன்மையான வழங்குணர்.

சேயற்பணி

தற்கால உற்பத்தித் துiறியல் காணப்படும் முழுமையான தீர்வை செலவினம் மீதான அதிக வினைத்திறனான முறையில் வழங்குதல். வாடிக்கையாளர்களின் வர்த்தக செயன்முறையை வரையறுப்பதில் உதவி செய்தலும் IT மற்றும் AV தொடர்பான உட்கட்டமைப்பை நிறுவனப் பிரிவூகளிற்கிடையே அமைப்பதற்கு முன்னுரிமையளித்தல்.

விழுமியங்கள்

வர்த்தகத்தின் அனைத்து பெரிய சொத்துக்களும் அத்துறையின் வாடிக்கையாளர்கள் மற்றும் மக்களில் தங்கியிருக்கும் சந்தர்ப்பத்தில் நாங்கள்இ ஒருமைப்பாடுஇ நோர்மைஇ தரம் மற்றும் அர்ப்பணிப்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாங்கள் மேலும் எந்தவொரு வெற்றிகரமான வர்த்தக பரிமாறலும் “சேவைத் தரம் மற்றும் உற்பத்திப் பொருளின் விலையில்” தங்கியிருக்கின்றமை தீர்கமானதாக நோக்குகின்றௌம்.

சேவை மற்றும் உற்பத்திகள்

IDACOM ஆனது பலதரப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை உள்ளடக்குகின்றது. எங்கள் வர்த்தக கட்டமைப்பானதுஇ IDACOM இனை நாடளாவிய மற்றும் மாகணம் முழுவதுமான பரந்தளவில் விநியோகம் மற்றும் சேவைகள்இ உதவிகளை வழங்கும் வகையில் கட்டமைத்துள்ளோம். IDACOM ஆனது மேலும் அதனுடைய வர்த்தகப் பங்காளிகளின் சேவைகளை பயிற்சியளித்தல் மற்றும் விநியோக செயற்பாடுகளில் பயன்படுத்துகின்றது.

  • இன்டல் சனல்•ஏசர் அங்கீகரிக்கப்பட்ட பங்காளர்
  • HP அங்கீகரிக்கப்பட்ட பங்காளர்
  • TP லிங்

டியிட்டல் சிக்னேச்சர்

  • கட்டுப்பாடு மற்றும் விநியோகம்
  • காட்சித் திரை
  • மூலங்கள்
  • கணினி வன்பொருட்கள்
  • பிளேயர்ஸ்
  • கணினி மென்பொருள்

காட்சித் திரை (Visual)

  • முன் மற்றும் பின்பக்க திரைப் பாதுகாப்பு தாழ்
  • தரவூ / காட்சி படம்காட்டும் கருவி
  • ஒளிப்பட திரைகள்
  • LCD காட்சித் திரை
  • LED காட்சித் திரை
  • ஓவர்கெட் படம்காட்டும் கருவி
  • புறயெக்டர் லாம்ப்

Presentation and Training Aids

•Learning Labs and Response systems

Signal Management and Processing

  • Audio
  • Computer
  • Routing and Matrix switchers
  • Switcher

IP Surveillance

  • Network Cameras
  • Network storage
  • Access control
  • Monitoring

Broadcasting

  • Software
  • Hardware

கணினி மென்பொருள் அபிவிருத்தி

அனைத்து மென்பொருள் தயாரிப்பும் மைக்குறௌசொப்ட் தளத்தில் தயாரிக்கப்படுகின்றன. இது ஏற்கனவே உள்ள மென்பொருட் தளங்களுடன் ஒருங்கிணைப்பதற்கு பொருத்தமாக அமைகின்றது. கீழ்க்காணும் மொன்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  • MS – விசுவல் பேசிக்
  • MS – அக்சஸ்
  • MS – விசுவல C++
  • MS – விசுவல J++
  • MS – புறண்ட்பேச்
  • C/C++
  • நெட் பிறேம்வேர்க்
  • ASP / ASPA / ASP Net
  • MS-SQL/ My-SQL/ PHP

பழுதுபார்த்ல் மற்றும் சேவை மத்திய நிலையம்

அனைத்து திருத்தப்பட்ட அல்லது மேம்படுத்தப்பட்ட உபகரணங்களும் பணிமனை உத்தரவாதத்தை உள்ளடக்குகின்றது.

  • PC பழுதுபார்த்தல்
  • PC மேம்படுத்தல்
  • சேர்வர் மேம்படுத்தல்
  • மின் அச்சுப் பொறி பராமரிப்பு
  • மின் அச்சுப் பொறி திருத்துதல்
  • பொதுவான பழுதுபார்த்தல் வேலைகள் மற்றும் ஏனைய உபகரணங்களின் மேம்படுத்தல் (UPS வலையமைப்பு உபகரண்ங்கள் போன்றவை)

வலையமைப்பு

  • சர்வதேச தரங்களிற்கு அமைய அமுல்ப்படுத்தல் மேற்கொள்ளப்படும்
  • கணினி வலையமைப்பு சரிப்படுத்தல் மற்றும் அமுல்ப்படுத்தல்
  • கணினி வலையமைப்பு உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்புக்களின் விநியோகம்
  • வலையமைப்பு வடங்களை பொருத்துதல் மற்றும் தந்தியற்ற வலையமைப்புக்கள்
  • களப்பகுதியில் உதவிப் பயிற்சி
  • சேவர் சொலூசன் (மென்பொருள் மற்றும் கணினி வன்பொருள் அமுலாக்கம்)
  • காப்பு நகல் எடுப்பு சேவைகள் (அனர்த்த மீழ் நிலைப்படுத்தல் பிரதி உபகரணம்)

 

IT பயிற்சிகள்

பயிற்சிகள் முழுமையான தகைமை பெற்ற பயிற்றுவிப்பாளர்களால் மேற்கொள்ளப்படும்

  • VIP
  • குயிக் புக்
  • மைக்கிறௌசொப்ட் கோப்பரேசன
  • A+ கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வூகள
  • N+ கணினி வலையமைப்பு (தொழில்நுட்ப)
  • வேண்டுகோள்களிற்கிணங்க தளப்பகுதி பயிற்சிகள் வழங்கப்படும

 

மின் அச்சு பொறி மற்றும் நுகர் பொருட்கள்

அனைத்து உபகரணங்களும் OEM (அசல் உபகரண உற்பத்தியாளர்) உடன் விற்பனை செய்யப்படும்.

  • கனொன்
  • லெக்ஸ்மா
  • எப்சொன்
  • ஏச்பீ
  • டெல்
  • பனசோனிக்
  • சம்சொங்

நுகர் பொருட்கள் வர்த்தக குறியிடப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட இருவடிவிலும் வழங்கப்படும்

இணையத் தீர்வூகள்

IDACOM ஆனது ஒரு M-Web வர்த்தக பங்காளராக இருப்பதுடன் பாதுகாப்பான கணினி வலையமைப்பு மற்றும் VPN’s கட்டமைப்புகளினூடான இணையத்தளங்களை உருவாக்குதல் போன்ற ஒருங்கிணைந்த தீர்வூகளை வழங்குகின்றது.

  • M-Web உடன் சேவர் கொஸ்ட்டிங்
  • தானியங்கி காப்பு நகல் எடுப்புத் தொகுதி
  • Dialup/ADSL/Diginet/ I-Brust/wireless
  • இணையத்தை நிறுவூதல் (Web Hosting)
  • ஈ – வர்த்தக தீர்வூ
  • E- Commerce solutions
  • 24 Hrs. Tech support

வர்த்தக செயற்பாடு

IDACOM ஆனது ஒரு M-Web வர்த்தக பங்காளராக இருப்பதுடன் பாதுகாப்பான கணினி வலையமைப்பு மற்றும VPN’s கட்டமைப்புகளினூடான இணையத்தளங்களை உருவாக்குதல் போன்ற ஒருங்கிணைந்த தீர்வூகளை வழங்குகின்றது.

  • தீர்வூ மூலங்கள்
  • தொலைபேசி மூலமான உதவி நிலையம்
  • உதவி கட்டமைப்பு

தீர்வூ மூலங்கள்

IDACOM ஆனது வாடிக்கையாளர்களினால் தருவித்தற் கட்டளை பிறப்பிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையூம் அவற்றின் கிடைப்பனவூ மற்றும் தரங்களின் அடிப்படையில் உரிய இடத்திற்கு கொண்டுசென்று விநியோகிக்கின்றது. இவற்றில் சில நேரடியாகவே இறக்குமதி செய்யப்பட்டவை. இவ்உபகரணங்கள் சரியான முறையில் பொதியிடப்பட்டு முத்திரையிடப்படும். அனைத்து அலகுகளும் வாடிக்கையாளர் உடனடிப் பாவனைக்கு உகந்தவகையில் முன்கூட்டியே மீழ் ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்படும். உபகரணங்களை பொருத்தும் பொறுப்பு IDACOM இடம் வழங்கப்படும் சந்தர்ப்பங்களில் IDA COM இனுடைய தலைமையகத்துடன் முன்கூட்டியே ஏற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்ளவேண்டும்.

தொலைபேசி மூலமான உதவி நிலையம்

எந்தவொரு பிரச்சனைகளும் எழும் சந்தர்ப்பங்களில் IDACOM இனுடைய உதவி தலைமை நிலையத்தை தொடர்பு கொள்ளவேண்டியது வாடிக்கைளாயர்களின் கடமையாக அமைகின்றது.
எமது எந்தவொரு பொருட்கள் மற்றும் சேவைகளை பெறும் அனைத்து வாடிக்கையாளரும்; தொலைவேசி மூலமான உதவியை பெற்றுக்கொள்ள முடியூம். உதவி நிலையத்தின் வசதிகளை பொற்றுக் கொள்வதற்கான செலவினங்கள் அது தொடர்பான வாடிக்கையாளர்களினால் மேற்கொள்ப்பட்ட பரிமாற்றங்களிற்கு அமைவாக தீர்மானிக்கப்படுவதுடன் இவை வாடிக்கையாளர்களிற்கு முன்பதாகவே சேவைகளை ஆரம்பிப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படும். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட அனைத்து பொருட்கள் மற்றும் அவை தொடர்பாக சேகரிக்கப்பட்ட தகவல்களின் இரகசியத் தன்மை (கணனிகளில் சேமிக்கப்பட்ட தகவல்கள்) இறுக்கமான முறையில் பேணப்படும்.

உதவி கட்டமைப்பு

IDACOM ஆனது பொருத்தமான உதவிக் கட்டமைப்பை தேவையான இடத்தில் வழங்குவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களிற்கு விற்கப்பட்ட பொருட்கள் மீதான பொருத்தமான முகாமைத்துவத்தை பேணுவதற்கும் அவற்றின் மீதான உத்தரவாதத் தன்மையை பேணுவதற்கும் உதவிசெய்கின்றது. விற்பனைக்குப் பிந்திய சேவைகள் மற்றும் உத்தரவாதத்தை பேணுதல் ஆரம்ப வியாபார பரிமாற்றத்திற்கு ஒப்பான தேவைப்பாடாக இருப்பதை நாங்கள் நம்புகின்றௌம்.

IDA COM இனால் விநியோகிக்கப்பட்ட அனைத்து கணினி வன்பொருட்கள் மற்றும் மொன்பொருட்களினதும் தயாரிப்புஇ முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான தகவல்களை பதிந்து வைப்பதற்கான கணனி மயப்படுத்தப்பட்ட தொகுதி ஒன்று மைக்குறௌசோப்ட் தளத்தில் உருவாக்கப்பட்டு பேணப்படுவதுடன் இதன் மூலம் வேறுபட்ட மென்பொருட்களிற்கு இடையேயான இணைப்புக்களை ஏற்படுத்துவதன் இலகுத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றிற்கான முகாமைத்துவ தொகுதி பட்டைக் குறியீடு இடப்பட்ட விவரச் சீட்டுக்களை ஒவ்வொரு கணனி மற்றும் உபகரணங்கள் மீதும் இணைப்பதன்மூலம் அவற்றை முழுமையாக மேற்பார்வை செய்யக்கூடய வசதிகளை கொண்டுள்ளது. இந்த விபரச் சீட்டுக்கள் இரண்டு பொறுமாணங்களை உள்ளடக்குகின்றன. பட்டைக் குறியீட்டை உருவாக்குவதற்கான எழுந்தமாதிரியான இலக்கம் மற்றும் பாவனையாளர் தேவைக்கான இயற்கை எண் இலக்கம். இது பாவனையாளர்களிற்கு இலகுவாக வாசித்து அறிந்து கொள்வதற்கும் பட்டைக் குறியீட்டு உள்ளீட்டு கருவி மூலம் கணினி மயப்படுத்தப்பட்ட களஞ்சிய தகவல் தொகுதியில் தேடல்களை மேற்கொள்வதற்கும் வசதியாக அமைகின்றது.