உற்பத்தியாளராக பதிவூசெய்வதற்கான விண்ணப்பம் அதற்கெனத் தயாரிக்கப்பட்ட பிரத்தியேக விண்ணப்பப் பத்திரத்தினூடாக அதன் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிடப்பட்ட ஆவணங்களின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளுடன் ஆவணங்களின் மூலப் பிரதிகள் சகிதம் கையளிக்கப்படவேண்டும்.
தனியாள் வியாபாரம் (தனியூரிமை நிறுவனம்)
- தனியூரிமை வியாபார பதிவூச் சான்றிதழ் (BRC) அல்லது கிராம சேவகர் கடிதம்
- உரிமையாளரின் தேசி அடையாள அட்டைப் பிரதி
- 02 கடவூச் சீட்டு அளவான நிழல்ப்படப் பிரதி (அடையாள அட்டை வழங்குவதற்காக)
பங்குரிமை நிறுவனம்
- பங்குரிமைப் பதிவூச் சான்றிதழ்
- உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள பங்காளர்களின் தேசிய அடையாள அட்டையின் நிழல்ப்படப் பிரதி
- 02 கடவூச் சீட்டு அளவான நிழல்ப்படப் பிரதி (அடையாள அட்டை வழங்குவதற்காக)
வரையறுக்கப்பட்ட நிறுவனம் (தனியாhர் / பொது)
- நிறுவனம் பதியப்பட்ட சான்றிதழ்
- விண்ணப்பத்தில் ஒப்பமிட்ட முகாமைத்துவ பணிப்பாளர் / பணிப்பாளரின் தேசிய அடையாள அட்டையின் நிழல்ப்படப் பிரதி
- 02 கடவூச் சீட்டு அளவான நிழல்ப்படப் பிரதி (அடையாள அட்டை வழங்குவதற்காக)
பொதுவான நிபந்தனைகள்
- உற்பத்தியாளர்கள் மேல்மாகாணத்தின் நிரந்தர வதிவாளர்களாக இருத்தல் வேண்டும்.
- உற்பத்திப் பொருட்கள் / சேவைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தரத்தில் அமைவதுடன் இலங்கைக்கான பொதுவான தர நியமங்களிற்கு உட்பட்டிருத்தல் வேண்டும்.
- உற்பத்தியாளர் அவர்களுடைய வியாபாரம் தொரட்பான சரியான தகவலை வழங்கவேண்டியூள்ளதுடன் IDA இனுடைய ஒரு உத்தியோகத்தர் சாண்றிதளை வழங்குவதற்கு முன்னதாக உறுதிப்படுத்தும் களப் பரிசோதனையை மேற்கொள்வார்.
- இரண்டு வருடங்களிற்கான பதிவூக் கட்டணமாக 500.00 ரூபாய்கள் அமைவதுடன் இவற்றின்கான பதிவூச் சான்றிதழ் ஐனுயூஇனால் வழங்கப்படும்.
- பதிவூ செய்யப்பட்ட உற்பத்தியாளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக மேலதிகமாக 500.00ரூபாய் கட்டணத்துடன் 02 கடவூச் சீட்டு அளவான வர்ண நிழல்ப்படப் பிரதிகளை கையளிக்கவேண்டும்.
- உற்பத்தியாளர்கள் IDA இனுடைய அனுமதியின்றி IDA இனுடைய பெயரையோ இலச்சினையையோ பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
- பதிவானது IDA இல் பதிவூசெய்யப்பட்ட திகதியிலிருந்து இரண்டு வருடங்களிற்கு மட்டும் செல்லுபடியாகும்.
- IDA இனுடைய முகாமைத்துவம்இ பதிவூகளை 14 நாட்கள் முன்கூட்டிய அறிவித்தலுடன் எந்தவெரு நோரத்திலும் இரத்துசெய்யமுடியூம்.•அங்கத்துவ கட்டணம் மீழப்பெற முடியாததாகவூம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீழ வழங்கப்படாததாகவூம் அமைகின்றது.