2019-01-05

தொழில் முனைவூ அபிவிருத்தி பயிற்சிகள

IDA 1- 10 நாட்கள் வரையான செயல்முறை தொழில் முனைவூ அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை மேல்மாகாணத்தை சேர்ந்த உற்பத்தியாளர்களிற்கு வழங்கி வருகின்றது. இவ் தொழில் முனைவூ அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் அவர்களுடைய வர்த்தகம் மற்றும் வர்த்தகம் சார்ந்த சூழலை ஆழமாக விழங்கிக் கொள்வதற்கு பங்களிப்புச் செய்கின்றது.

இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் IDA இனால் கைத்தொழில்துறையில்; புகழ்பெற்றவர்களின் பங்களிப்புடன் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. தொழில் முனைவூ அபிவிருத்தி பயிற்தி நிகழ்ச்சித் திட்டங்கள் பிரதானமாக மூன்றுவகையான குழுக்களை மையப்படுத்தியூள்ளன.

1.புதிய தொழிலை ஆரம்பிப்பதில் ஆர்வமுள்ளவர்கள்

2. கைத்தொழில்துறையில் ஏற்கனவே ஈடுபட்டுவருபவர்கள

3. தற்பொழுது வர்த்தகத்தில் சிறந்து விழங்கும் அதேவேளை அதைப் புதிய துறைகளிற்கு விஸ்த்தரிப்பதற்கு எதிர்ப்பர்த்துள்ளவர்கள்.

இந்த பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் இவைசாந்த்த துறைகளின் நிகழ்நிலைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதுடன் பங்கேற்பவர்களிற்கு இடையே அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கும் ஒருவருக்கு ஓருவர் கருத்துக்களை பகிர்வதற்கான உயரளவான சந்தர்ப்பங்களை வழங்குவதுடன் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான அங்கத்தவர்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டும் உள்ளது.

நிகழ்ச்சித்திட்டங்களின் குறிக்கோள்கள்-

பங்குபற்றுபவர்களிற்கு இடையே வர்த்தகத் துறையில் காணப்படும் சந்தர்ப்பங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
வர்த்தகத் துறையின் வெற்றி மற்றும் தோல்விகளை தீர்மானிக்கும் காரணிகளை இனங்காண்பதற்காக தொழில் முயங்சியார்களிற்கு உதவிசெய்தல்.
தொழில் முனைவூத் தன்மையின் முக்கியத்துவத்தை இனங்காண்பதற்காக உற்பத்தித்துறையினரிற்கு உதவிசெய்தல்
உற்பத்திதுறையினரை புதிய சந்தைப் பகுதிகளிற்கு நுழைவதற்கு ஊக்குவித்தல்.
உற்பத்திகளின் பெறுமதியை அதிகரித்தல் மற்றும் பெறுமதி சேர்த்தல்.
பங்குபற்றுபவர்களினிடையே புதிய சந்தைப் பகுதிகளிற்கு நுழைதல் தொடர்பான வழிப்புணர்வை ஏற்படுத்தல்.
நேர்த்தியான கணக்கீட்டு தொகுதிகளை பேணுவதற்கு உதவிசெய்தல்.
சந்தையின் தேவைக்கு ஏற்றவகையில் தரச்சாண்றிதழை பெற்றுக் கொள்வதற்காக உற்பத்தியாளர்களை ஊக்குவித்தல்.
இலங்கையில் உள்ள தரச்சாண்றிதழை வழங்கும் நிறுவனங்களின் செயன்முறை தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குதல்.
வாடிக்கையாளர் சேவையின் முக்கியத்தை அறிந்துகொள்ளல்.
சந்தைப்படுத்தல் திட்டங்கள் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கு உதவிசெய்தல்.
சந்தை நிலைவரம் தொடர்பான தகவல்களை வழங்கும் வலைத்தளம் மற்றும் தகவல் மூலங்கள் தொடர்பான கருவிகள் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
உற்பத்தித்துறையினரை அவர்களின் நிறுவனங்களில் தொடர்ச்சியான சந்தை தொடர்பான ஆய்வூகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை இனங்காண்பதற்காக ஊக்கப்படுத்துதல்.
புதிய சந்தை வாய்ப்புக்களை இனங்காணல் மற்றும் நிகழ்கால வர்த்தக சுற்றாடலிற்குள் தொடராக ஊடுருவல் போன்றவற்றில் உற்பத்தித்துறையினரை ஊக்குவித்தல்.
அவர்களுடைய உற்பத்திகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் நிகழ்கால நடத்தை மற்றும் போக்கு தொடர்பாக விளங்கிக் கொள்வதற்கு உதவிசெய்தல்.
போட்டியாளர்கள் மற்றும் போட்டித்தன்மை தொடர்பாக விளங்கிக் கொள்வதற்கு.
நுகர்வோர் மற்றும் விலை நிலைவரங்களை அறிந்துகொள்வதற்கு.