2019-01-06

மர வேலை மத்திய நிலையம் – டெல்த்தர

மொரட்டுவைப் பகுதியானது அதிக அளவான மரத்தளபாட உற்பத்திகளை மேல் மாகாணத்தில் உருவாக்கி வருகின்றது. இந்தச் சேவை நிலையமானது இப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக பொதுவான சேவை நிலையமாக அமைந்துள்ளது. இந்த நிலையம் நவீன இயற்திரங்களை பயன்படுத்தி பெறுமதி வாய்ந்த தளபாட உற்பத்திகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பங்களை வழங்குவதுடன், மொரட்டுவை தச்சுவேலை உரிமையாளர்களின் பங்களிப்புடன் செயற்படுத்தப்பட்டுவருகின்றது. அரச நிறுவனங்களிற்கு விநியோகிக்கப்படும் மரத் தளபாடங்களை உருவாக்கும் செயற்பாடுகள் இந்த நிலையத்தின் ஊடாக, மேல் மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தினால் செய்யப்பட்டுவருகின்றது.